செராண்டா தமிழ்ப் பள்ளி விவகாரத்தில்டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன்யாரையும் ஏமாற்றவில்லை

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு மே 10-
உலு சிலாங்கூர் செராண்டா தமிழ்ப் பள்ளி விவகாரத்தில் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் யாரையும் ஏமாற்றவில்லை என்று கவுன்சிலர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்றால் செராண்டா தமிழ்ப் பள்ளி பிரச்சனைகளை எந்த வகையில் தீர்வு காண்பது தொடர்பில் முயற்சிகளை மேற்கொள்வேன் என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால் செராண்டா தமிழ்ப் பள்ளி விவகாரத்தில் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் ஏமாற்றி விட்டார் என்று செகு சந்திரா சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

இவரின் குற்றச்சாட்டுகளில் எந்த ஒரு அடிப்படை உண்மையுமில்லை.

கடந்த 15வது பொது தேர்தலில் தோல்வியுற்றபோதிலும் இன்று வரை பள்ளி சம்பந்தபட்ட விடயங்களை டாக்டர் சத்திய பிரகாஷ் மேற்கொண்டு வருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை என்றார் ஶ்ரீகாந்த்.

மேலும் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் சேவையாற்றி வருகிறார் என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.

ஆகவே சந்திரா முன் வைக்கும் குற்றச்சாட்டுகளை இங்குள்ள மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles