மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தி விடாதீர்கள்!கோலகுபு பாரு இந்தியர்களுக்கு டத்தோஸ்ரீ ராஜூ – பாப்பா ராயுடு வேண்டுகோள்

செ.வே.முத்தமிழ்மன்னன்

கோலகுபு பாரு மே 10-
கோலகுபு பாருவில் வசிக்கும் இந்திய வாக்காளர்கள் சிந்தித்து தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்கும்படி பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இன்று கோலகுபு பாருவில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் இருவரும் இணைந்து பல இடங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கடந்த மூன்று தவணைகளாக கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினராக இருந்த லீ கீ ஹோங் தொகுதி மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றி உள்ளார்.

அவர் காலமானதை தொடர்ந்து இங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் சார்பில் ஜசெக பெண் வேட்பாளர் பாக் சோக் தாவ் போட்டியிடுகிறார்.

இவர் வெற்றி பெற்றால் இங்குள்ள மக்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு நிறைவான சேவைகளை வழங்குவார்.

பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுபவர்கள் கோலகுபு பாரு இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டும்.

மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தி விடாதீர்கள் என்று அவர்கள் இருவரும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கோலகுபு பாரு இந்தியர்கள் வழங்கும் ஆதரவு பெரும் உற்சாகத்தை அளிக்கிறது என்று டத்தோஸ்ரீ ராஜூ மற்றும் பாப்பா ராயுடு தெரிவித்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles