
செ.வே முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் மே 10-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது நாம் நம்பிக்கை வைப்போம்.
அந்த வகையில் கோலகுபு பாரு இந்தியர்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யும்படி பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.
நாளை மே 11 ஆம் தேதி வாக்களிப்பு தினமாகும்.
கோலகுபு இந்தியர்கள் கண்டிப்பாக பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்க வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக பல திட்டங்களை உருவாக்கி செயல் படுத்தி வருகிறார்.
இந்திய சமுதாயத்தை இவர் ஒருபோதும் கைவிட மாட்டார் .
பிரதமர் மேற்கொண்ட முயற்சியால் இன்று ஐந்து தோட்டங்களை சேர்ந்த 245 பாட்டாளிகளுக்கு தரை வீடுகள் கிடைத்துள்ளது.
26 ஆண்டுகால பிரச்சனைக்கு மடானி அரசாங்கம் நல்ல முறையில் தீர்வு கண்டிருக்கிறது.
மடானி அரசாங்கத்தால் மட்டுமே இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அவர் சொன்னார்.
பிரதமரின் உத்தரவுக்கு இணங்க இன்று இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு இன்று 7,500 அந்நியத் தொழிலாளர்கள் கிடைத்துள்ளனர்.
14 ஆண்டுகளாக பரிதவித்த இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு இன்று விடிவுகாலம் பிறந்துள்ளது.
அதேசமயம் 9 ஆண்டுகளுக்கு பிறகு சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெறுவதற்கு மடானி அரசாங்கம் முக்கிய காரணமாகும்.
ஆகவே கோலகுபு பாரு இந்தியர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீது வைத்து பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்கும்படி மனிதவள முன்னாள் அமைச்சருமான அவர் கேட்டுக் கொண்டார்.

