
பெட்டாலிங் ஜெயா, மே 23 – பெட்டாலிங் ஜெயா டிங்கி பரவல் அபாயம் அதிகம் உள்ள ஏழு புதிய இடங்களை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் அடையாளம் கண்டுள்ளது. அந்த வைரல் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு மேம்படுத்தப்பட்ட முயற்சிகள் தேவை என்பதை இது குறிக்கிறது.
பிஜேயு 10 இல் உள்ள இடாமான் அபார்ட்மெண்ட், பிஜேயு 6ஏ இல் உள்ள கம்போங் சுங்கை காயு ஆரா 2, எஸ் எஸ் 4B, எஸ் எஸ் 21, கிளானா டி புத்ரா, புத்ரி காண்டோமினியம், மற்றும் மேடான் சஹாயா 1 அப்பார்ட்மெண்ட் பிஜேஎஸ் 2சி ஆகியவையே டிங்கி பரவல் அபாயம் உள்ள அந்த ஏழு இடங்களாகும்.
இப் பிரச்சினைக்குத் தீர்வு காண வரும் ஜூலை மாதத்திற்குள் முயற்சிகளை முடுக்கிவிட தற்போதுள்ள பணிக்குழு அறிவுறுத்தப் பட்டுள்ளது பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது ஜாஹ்ரி சாமிங்கோ கூறினார்.
Selangot kini

