தீவுகளைச் சுற்றி போர் பயிற்சி, எச்சரிக்கை… – தைவானை ‘மிரட்டும்’ சீனா

தைபே: தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், தைவானைச் சுற்றி இரண்டு நாள் (மே 23,24) ராணுவப் பயிற்சியை சீனா தொடங்கியுள்ளது. இதனை தைவான் கடுமையாக கண்டித்துள்ளது.

சீனாவில் கடந்த 1949-ல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது. ஆனாலும் தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கூறி வருகிறது.

அதுமட்டுமன்றி தேவை ஏற்பட்டால் தைவானைக் கைப்பற்ற, படை பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா அடிக்கடி கூறி வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles