
சுங்கை சிப்புட், மே.24 இவ்வட்டாரத்தில் இந்திய இளைஞர்கள் உட்பட பலருக்கு கால்பந்து பயிற்சிகள் வழங்கியவர் பயிற்சியாளர் ராஜா.
இவரின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் சிறந்த கிளப்புகளுக்கு விளையாட்டாளராகவும் ஒரு சிலர் மாநில அளவில் மிளிர்கினர் என்று இங்கு நடைபெற்ற ராஜாவின் வெட்ரன் சுழற்கிண்ண போட்டியின் ஏற்பாட்டுக்குழு தலைவர் இளங்கோ கூறினார்.
இவர் இங்குள்ள இளைஞர்களுக்கு நேரம் காலம் பாராமல் பல்லாண்டுகளாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பயிற்சிகள் அளித்து வந்தவர்.
அண்மையில் இவர் உடல்நல பாதிப்பை நோக்கினார். அவரின் சேவைக்கு நன்றி கடனாக பிரதிபலனாக அவரை நினைவுகூறும் வகையில் இந்த வெட்ரன் சுழல்கிண்ணம் கால்பந்து போட்டியை நடத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
அதன் அடிப்படையில் சுசீத்தா குழுவிற்கு சுங்கை சிப்புட் இந்தியர்கள் குழுவிற்கும் இந்த நட்பு முறையிலான கால்பந்து போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

பயிற்சியாளர் ராஜா ஓய்வு நேரங்களில் இங்குள்ள இளைஞர்கள் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி பின்னர் அவர்கள் மேலும் அடுத்த கட்ட நிலைக்கு செல்ல வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டவர் என்று அவர் பாராட்டினார்.
இந்த போட்டி விளையாட்டு வெற்றிரமாக நடைபெற சுங்கை சிப்புட் பிரவினா எண்டர்பிரைஸ் உரிமையாளர் வி.மனே நிதியுதவி வழங்கி உதவினார்.
அவருடன் மேலும் பல நல்லுள்ளங்கள் உதவினர். அவர்கள் அனைவருக்கும் இளங்கே மற்றும் அவரது ஏற்பாட்டுக்குழுவினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

