
லண்டன், ஜூன் 2 –
சாம்பியன்ஸ் லீக் எனப்படும் ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரியல் மெட்ரிட் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
இன்று அதிகாலை நேரத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் 2-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த புரோசியா டோர்ட்மெண்ட் கிளப்பை வீழ்த்தியது.
இதன் மூலம் மீண்டும் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்று ரியல் மெட்ரிட் சாதனை படைத்துள்ளது

