
மறைந்த துன் சாமிவேலுவிற்குப் பிறகு இந்தியர்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாகத் திகழும் மஇகாவை சிறந்த முறையில் அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கட்சியினை வழி நடத்தி வருகிறார்.
மீண்டும் அவரை மஇகாவின் தேசியத் தலைவராக ஏகமானதாக தேர்ந்தெடுத்த கட்சியின் அனைத்து தலைவர்களுக்கும் முதலில் நன்றியினையும் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று நம்மிடையே ஏராளமான கட்சிகள் இருந்தாலும் மஇகாவில் மட்டும்தான் கிளைகள்,தொகுதிகள்,மாநிலம், தேசியம் என ஒரு கட்டுக்கோப்புடன் மஇகா திகழ்ந்து நிமிர்ந்து நிற்கிறது .கல்வி மட்டும் சமுதாயப் போன்ற எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் மக்கள் மஇகாவிடம்தான் தங்களது உதவிகளை தேடி வருகின்றனர்.
உதவிகளை தேடி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அதற்கான உதவிகளை செய்து வருவதில் டன்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு நிகர் யாருமில்லை என்பதுதான் உண்மை.
மஇகாவினை விட்டுப் பிரிந்துப்போய் பல கட்சிகள் இருந்தாலும் அவைகள் அனைத்தும் மாநாடு மட்டும் நடத்தி விட்டு ‘ஒப்புக்குச் சித்தப்பாவாக ‘இருந்து வருகிறது.இந்திய சமுதாயத்தினரின் நம்பிக்கைக்குரிய கட்சியாக மஇகா மட்டுமே இன்னும் தலை நிமிர்ந்து நிற்கிறது.
இந்த நாட்டின் இந்தியர்களின் முதுகெழும்பே மஇகாதான்,அதனால்தான் நமது பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு இடைத்தேர்தலில் அங்குள்ள இந்திய வாக்காளர்களை சந்திப்பதற்கு மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் மஇகாவினர் பக்கத்தான் ஹாராப்பான் வெற்றிப் பெற தங்களது தேர்தல் பிரச்சாரத்தை அங்கு களம் இறங்கி வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர்.
நல்ல மாலுமியால்தான் ஒரு பெரிய கப்பலை நல்ல முறையில் அதன் கடல் பயணத்தை மேற்கொண்டு கரைச் சேர்க்க முடியும்.அதுபோலத்தான் கட்யில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சனைகள் இருந்தாலும் நல்ல தலைவனாக இந்த மஇகா எனும் பெரிய கப்பலை டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கரைச் சேர்ப்பார் என்பது இந்த நாட்டு இந்தியர்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையாகும்.
செபுத்தே எஸ் எஸ் ராமமூர்த்தி

