தமிழ்மொழி பேசும் இந்தியர் இந்திய சமூகநலத்துறை அமைச்சராக இடம் பெற வேண்டும்

ஈப்போ, ஜுன். 2: இந்நாட்டில் இந்தியர்களான அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அனுதினமும் இந்நாட்டு இந்தியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் தமிழ்மொழியை பேசும் இந்தியர் ஒருவர் முழு அமைச்சராக நியமனம் செய்யப்பட வேண்டும் என்று சுமார் பத்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ரகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

தற்போது ஒரு சீக்கியர் இந்தியர்களின் பிரதிநியாக செயல்பட்டாலும், அவை இந்தியர்களின் தேவையை நிறைவு செய்ய இயலவில்லை. குறிப்பாக தமிழ்மொழி பேசும் இந்தியர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டால் தங்கள் பிரச்சுனைகளை இந்நாட்டு இந்தியர்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் ஒப்பவிக்க முடியும் என்று அவர் கருத்துரைத்தார்.

தற்போது தமிழ்மொழி பேசும் துணையமைச்சர்கள் இருந்தபோதும் அவர்கள் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்தை பதிவு செய்ய வாய்ப்பில்லை. இந்த அமைச்சரவை கூட்டத்தில் முழு அமைச்சர் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும் என்பதனை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகையால், இவ்விவகாரம் குறித்து பிரதமர் நல்லதொரு தீர்வு காண்பது என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியர்களின் சமூகநலத்துறையை கவனிக்க பிரதமர் துறை இலாகாவில் மற்றொரு இந்திய அமைச்சரை நியமனம் செய்தால் மேலும் சிறப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நாடடு இந்தியர்கள் பிரதமர் மற்றும் மடானி அரசாங்கம் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். பிரதமருக்கு என்றென்றும் வற்றாத ஆதரவு வழங்கி வருகின்றனர். அண்மையில் கோலகுபு பாரு இடைத்தேர்தலில் ஒரு சில பொறுப்பற்ற தரப்பினர் இம்முறை தேர்தலை் புறக்கணிக்கும்படி வலியுறுத்தியும் இந்திய மக்கள் அவர்களின் கடமையை நிறைவு செய்தனர். பிரதமர் மீது இந்திய மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை மற்றுக் நல்லிணக்கத்தை குறிப்பதாக குறிப்பதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles