
கோலாலம்பூர் ஆக 18-
எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்ய ஒரு சிறப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.
ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த சீர்திருத்தங்கள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்.
அந்தந்த நேரத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் விருப்பத்தை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கெஅடிலான் தேசிய மாநாட்டில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் வெளியிட்ட அறிவிப்பு குறித்து கருத்து தெரிவிக்குமாறு கேட்டபோது,
இது வெறும் அரசாங்க சீர்திருத்தமாக இல்லாமல், ஒரு நிரந்தர சீர்திருத்தமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் இன்று கேஎல் சென்ட்ரலில் செய்தியாளர்களிடம் கூறினார்

