உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணிக்கு ‘ஷாக்’.. சமாஜ்வாதி 35, காங்கிரஸ் 6 இடங்களில் முன்னிலை; அயோத்தியில் பாஜக பின்னடைவு!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 35 தொகுதிகளிலும், காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணி 42 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

உ.பி.யில் இண்டியாவின் முக்கிய கட்சியான சமாஜ்வாதி 35, காங்கிரஸ் 6 மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஒரு தொகுதியில் முன்னணியாக உள்ளன.

பாஜக 34, அப்னா தளம் 1-ல் முன்னணி வகிக்கின்றன. ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு சிங் பின்னடைவை சந்தித்துள்ளார்.

வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி முன்னணி வகிக்கிறார். .
ரேபரேலியில் ராகுல் காந்தியும், அமேதியில் கிஷோரி லால் சர்மாவும் முன்னணி வகிக்கின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜகவின் வேட்பாளரான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles