தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி முன்னிலை

சென்னை: தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் ஏப்.19ல் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.

ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தி.மு.க., கூட்டணி 38 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 1, பா.ஜ., கூட்டணி 1 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

விருதுநகரில் அதிமுக., கூட்டணியில் இடம்பெற்ற தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனும், தர்மபுரியில் பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க.,வின் சவுமியாவும் முன்னிலை பெற்றுள்ளனர். மற்ற தொகுதிகள் அனைத்திலும் திமுக., கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles