


ஊத்தாங் மெலிந்தாங் ஜூன் 21-
மஇகாவின் 80 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மிகப்பெரிய அளவில் ஊத்தாங் மெலிந்தாங் சன்மார்க்க மண்டபத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
சன்மார்க்க மண்டபத்தில் பேட்மிண்டன் போட்டியில் இரட்டையர் பிரிவில் 32 குழுக்கள் பங்கேற்றது.
இதில் தினா ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதில் அனைத்து இனத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டது பெருமை அளிக்கிறது என்று பாகான் டத்தோ தொகுதி இளைஞர் அணி தலைவரும் துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடியின் சிறப்பு அதிகாரியுமான அர்விந்த் அப்பளசாமி தெரிவித்தார்.
ஊத்தாங் மெலிந்தாங் எஸ் எம்.கே இடைநிலை பள்ளி அரங்கில் நடைபெற்ற புட்சால் கிண்ண கால்பந்து போட்டியில் 132 குழுக்கள் கலந்து கொண்டன.
ஓட்டப்பந்தயம் மற்றும் வலைப்பந்து போட்டி ஊத்தாங் மெலிந்தாங் பாரதி தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.
ஓட்டப்பந்தய போட்டியில் 10 அணிகளும் வலைப்பந்து போட்டியில் 32 குழுக்களும் கலந்து கொண்டன.
புட்சால் கிண்ண கால்பந்து போட்டியில் இலவன் போய்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
நாடு தழுவிய அளவில் ம இகா தொகுதிகள் ஏற்பாட்டில் விளையாட்டு போட்டிகள் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு ஏககாலத்தில் நடைபெற்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.
பாகான் டத்தோ தொகுதியில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டது உற்சாகத்தை அளிக்கிறது.
பாகான் டத்தோ தொகுதி தலைவர் டத்தோ ஆர் சுப்ரமணியம் தலைமையில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனிடையே இந்தியர்கள் மத்தியில் தற்போது ம இகா மீண்டும் எழுச்சியை பெற்றிருப்பது பாராட்டுக்குரியது.
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தலைமையில் ம இகா வீறுநடை போடுகிறது என்று அர்விந்த் அப்பளசாமி கூறினார்.

