ஹங்கேரியில் கல்வி பயிலும் மாணவி தான்யா ஸ்ரீக்கு 𝑹𝑴𝟭𝟬,𝟬𝟬𝟬 மஇகா கல்வி உதவித்தொகை!

பெந்தோங், ஆக 9-
பெந்தோங் தொகுதி மஇகா தலைவர் டாக்டர் ஜெயந்திரன் ஜெயராமன் அவர்களின் முயற்சியின் மூலம், மாணவி தான்யாஸ்ரீ ஜெபகுமார் அவர்கள் ஹங்கேரியில் உயர்கல்வியைத் தொடருவதற்காக 𝑹𝑴𝟭𝟬,𝟬𝟬𝟬 மஇகா கல்வி உதவித்தொகையைப் பெற்றுள்ளார்.

இந்த உதவி வெறும் நிதியுதவி மட்டுமல்ல; இது அவரது கல்விக் கனவுக்கும் எதிர்கால இலட்சியங்களுக்கும் வழங்கப்படும் நம்பிக்கையும் ஆதரவுமாகும்.

இந்த கல்வி உதவி கிடைக்க ஆதரவளித்து, ஒப்புதல் வழங்கிய மஇகா தேசியத் தலைவர் மதிப்பிற்குரிய 𝑻𝒂𝒏 𝑺𝒓𝒊 𝑫𝒂𝒕𝒐’ 𝑺𝒓𝒊 𝑫𝒓. 𝑺.𝑨. 𝑽𝒊𝒈𝒏𝒆𝒔𝒘𝒂𝒓𝒂𝒏 அவர்களுக்கும், பகாங் மாநில மஇகா தலைவர் மாண்புமிகு 𝒀𝑩 𝑽. 𝑨𝒓𝒖𝒎𝒖𝒈𝒂𝒎 அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெரிய கனவுகளையும் இலட்சியங்களையும் கொண்ட தான்யா ஸ்ரீ, தனது கல்விப் பயணத்தில் மேலும் உயர்ந்து செல்ல இந்த உதவி ஒரு சிறந்த வாய்ப்பாக அமையட்டும்.

அவரது எதிர்காலப் பயணம் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைய எங்களது வாழ்த்துகள்.

ஒரு குழந்தையின் கல்விக்கு நாம் உதவும்போது, நாம் ஒரு தனிநபருக்கு மட்டுமல்ல; ஒரு குடும்பத்தின், சமூகத்தின் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் பங்களிக்கிறோம்.
தான்யா ஸ்ரீ, ஹங்கேரியில் உங்கள் கல்விப் பயணம் சிறக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்! முழு நம்பிக்கையுடன் சென்று, விடாமுயற்சியுடன் கல்வி கற்று, எதிர்காலத்தில் சிறந்த மனிதராகவும் சமூகத்திற்குப் பயனுள்ளவராகவும் உயர வாழ்த்துகிறோம்.

உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையட்டும். கல்விப் பயணம் சிறக்கட்டும்; எதிர்காலம் வளமாக அமையட்டும் என்று டாக்டர்
ஜெயந்திரன் ஜெயராமன்
(தலைவர்
மஇகா பெந்தோங் தொகுதி தலைவர்) தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles