நெகிரி செம்பிலான் மாநில ஜசெக தலைவராக அருள் குமார் ஏகமனதாக தேர்வு!

சிரம்பான், ஆக 10-
நெகிரி செம்பிலான் மாநில ஜசெகவின் புதிய தலைவராக நீலாய் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் குமார் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

கடந்த நான்கு தவணைகளாக நீலாய் சட்டமன்ற உறுப்பினராக அவர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னா சட்டமன்ற தொகுதியில் ஜசெக தலைமை செயலாளர் அந்தோனி லோக் அதிர்ச்சி தரும் வகையில் தோல்வி கண்டதால் அவர் நெகிரி செம்பிலான் மாநில ஜசெக தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் இப்போது புதிய தலைவராக அருள் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles