கோம்பாக்கில் மக்கள் சேவைக்காக 2 நடமாடும் பல் மருத்துவ நாற்காலிகள் : மந்திரி பெசார் அறக்கட்டளை நன்கொடை

கோம்பாக், செப் 24 – மந்திரி பெசார் அறக்கட்டளை (Yayasan MBI), கோம்பாக் மாவட்ட பல் மருத்துவ கிளினிக்கிற்கு 6,400 ரிங்கிட் பெருமானமுள்ள இரு நடமாடும் பல் மருத்துவ நாற்காலிகளை நன்கொடையாக வழங்கியது.

அம்மாவட்டத்தில் பல் மருத்துவ சேவைத் திட்டத்தின் அமலாக்கத்தை ஊக்குவிப்பதற்காக, செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று, அந்த நன்கொடை செய்யப்பட்டதாக, மந்திரி பெசார் அறக்கட்டளையின் தலைவர் அஹ்மாட் அஸ்ரி சய்னால் நோர் தெரிவித்தார்.

கோம்பாக் மாவட்ட பல் மருத்துவ கிளினிக்கிற்கு இரு நடமாடும் பல் மருத்துவ நாற்காலிகளை நன்கொடையாக வழங்கியப் பின்னர் மந்திரி பெசார் அறக்கட்டளையின் தலைவர் அஹ்மாட் அஸ்ரி சய்னால் நோர் , மீடியா சிலாங்கூருக்கு பேட்டியளித்தார் படம் : மீடியா சிலாங்கூர்
கோம்பாக் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் சமூக நலத் திட்டங்களின்போது அந்த மருத்துவத் தளவாடம் பயன்படுத்தப்படும். அதன் மூலம் மக்களுக்கான பல் மருத்துவ சேவையை மேம்படுத்த முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

படம்: மீடியா சிலாங்கூர்
” மக்கள் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்த கோம்பாக்மாவட்ட பல் மருத்துவ கிளினிக்கிற்கு தற்போது பேருந்து ஒன்று உள்ளது.

எனினும், சில இடங்களுக்கு அந்த பேருந்தைக் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த நடமாடும் நற்காலி இருப்பதன் வாயிலாக, உள்ளூர் மக்களுக்கான சேவையை மேலும் விரிவுப்படுத்த முடியும்” என கோம்பாக் மாவட்ட பல் மருத்துவ அதிகாரி டாக்டர் இந்தான் எலியானா மொஹமெட் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles