காசே ஹவானா திட்டத்தின் கீழ் 153 தமிழ் பத்திரிகையாளர்கள் பயன் அடைந்துள்ளனர்! துணை அமைச்சர் தியோ நிக் சிங் அறிவிப்பு

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் செப் 27
மடானி அரசாங்கத்தின்
ஊடகவியலாளர்களுக்கான காசே ஹவானா நிதியுதவி திட்டத்தின் வாயிலாக 153 தமிழ் ஊடகவியலாளர்கள் பயனடைந்துள்ளனர் என்று
தகவல் தொடர்பு துறை துணையமைச்சர் தியோ நிங் சிங் தெரிவித்தார்

தேசிய ஊடகவியலாளர்கள் தினத்தை முன்னிட்டு மடானி அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கான ஹவானா காசே திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது.

இத்திட்டத்தின் வாயிலாக இதுவரை மொத்தமாக 850 ஊடகவியலாளர்கள் பயன் பெற்றனர்.

நாடு முழுவதும் உள்ள ஊடகவியலாளர்களுக்கு 2.5 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.

இதில் 153 தமிழ் ஊடகவியலாளர்களும் அடங்குவர். அவர்களுக்கு 460,000 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் தான் இதன் வாயிலாக பயன் பெற்றுள்ளனர்.

அரசாங்கம் தமிழ் ஊடகவியலாளர்களின் நலனுக்கும் முன்னுரிமை விளங்குகிறது என்பது இது காட்டுகிறது.

இப்படி தமிழ் ஊடகவியலாளர்களின் நலனுக்கு அரசாங்கம் என்றுமே கவனம் செலுத்தும்.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தை தொடக்கி வைத்து பேசிய துணையமைச்சர் தியோ நிங் சிங் இவ்வாறு கூறினார்.

தகவல் தொடர்பு அமைச்சின் கீழ் ஊடகப் புத்தாக்க நிதிக்கு 30 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

இந்நிதிக்கும் தமிழ் ஊடகங்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று துணையமைச்சர் தியோ கூறினார்..

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆண்டு கூட்டத்தில் கெஅடிலான் கட்சியின் தேசிய துணை செயலாளர் வழக்கறிஞர் சிவமலர், மைக்கி மகளிர் அணி தலைவி ஹேமலா சிவம், புளு பிரதர்ஸ் சமூக நல இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளர் டத்தோ டாக்டர் எம் சங்கர், மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் ஆலோசகர் டத்தோ டாக்டர் கு.செல்வராஜ், சிலாங்கூர் இந்தியர் வர்த்தக தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் டத்தோ சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles