
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் நவ 11-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு
தேசிய அளவிலான தீபாவளி கொண்டாட்டம் 2026 வரும் நவம்பர் 14 ஆம் தேதி பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் மாபெரும் அளவில் நடைபெறுகிறது.
தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு மற்றும் மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் (MAICCI) இணைந்து நடத்தும் இந்த விழா லிட்டில் இந்தியா, பிரிக்ஃபீல்ட்ஸ் (Little India, Brickfields) பகுதியில் காலை 9.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடைபெறும் என்று மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ என்.கோபால கிருஷ்ணன் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள், கலாச்சார கண்காட்சிகள் மற்றும் பாரம்பரிய உணவு விருந்துகள் இடம்பெறும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் காலை 11.00 மணிக்கு சிறப்பு வருகை புரிகிறார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது உரையில் இந்திய சமுதாயத்திற்கு இனிப்பான செய்தியை அறிவிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.
மைக்கி சம்மேளனத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து அமைப்புகளும் கலந்து கொள்கின்றன.
மண்ணின் மைந்தர்களின் இன்னிசை படைப்புகள் பொதுமக்களை பரவசத்தில் ஆழ்த்தும்.
மேலும் இந்த விழாவில் 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்கிறார்கள்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் இரண்டு மணிநேரம் தீபாவளி விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களை சந்திப்பார்.
விலாயா மாநிலத்தில் உள்ள 15 தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவர்களின் படைப்புகள் முத்தாய்ப்பாக இருக்கும்.
பொதுமக்கள் தங்களது வாகனங்களை மூன்று பள்ளிகளில் உள்ள இடங்களில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் சொன்னார்.
இன்று மைக்கி சம்மேளனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்கி துணை தலைவர் டாக்டர் டாக்டர் ஏ.டி.குமரராஜா, விக்னேஸ்வரன் மற்றும் லெட்சுமணன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

