காடேக் தொகுதியை நவீன விவசாய மையமாக மாற்றுவேன் – ஜெகசீலன் உறுதி

காடேக், நவ 10-

காடேக் பகுதியில் நவீன விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கே. ஜெகசீலன் தெரிவித்துள்ளார்.

காடேக் பகுதியில் நவீன காய்கறி சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்புக்கு ஏற்ற நிலங்கள் அதிகம் உள்ளதாக அவர் கூறினார். முன்பு ரப்பர் தோட்டங்களாக இருந்த நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றி, உள்ளூர் சந்தைக்கு தேவையான பயிர்களை உற்பத்தி செய்ய முடியும் என்றும், கோழி மற்றும் மாட்டுப் பண்ணைகள் அமைக்கவும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இளைஞர்களுக்கு தேவையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கினால், அவர்களே இத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்றும், இதன் மூலம் இளைஞர்கள் வேலை தேடி சிங்கப்பூர் செல்வது குறையும் என்றும் ஜெகசீலன் தெரிவித்தார்.

நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் காடேக் தொகுதியில் ஜெகசீலனை எதிர்த்து தேமு வேட்பாளர் எஸ். நடராஜா, பெர்சாமா வேட்பாளர் லவீன் பாலபிரபாகரன் மற்றும் புத்ரா வேட்பாளர் லைலா நோரிண்டா மாவொன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles