காடெக் தொகுதியில் வெற்றி பெற்றாலும் அலோர் காஜா நாடாளுமன்றத் தொகுதியைக் கைப்பற்றுவது உறுதியல்ல 

காடெக், நவ 10-

மலாக்கா மாநிலத் தேர்தலில் காடெக் (Gadek) சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவது, அடுத்த பொதுத் தேர்தலில் அலோர் காஜா நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்கு உத்தரவாதமாக அமையாது என்று பக்காத்தான் ஹராப்பான் மலாக்கா தலைவர் அட்லி ஸஹாரி தெரிவித்துள்ளார்.

மாநிலத் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் இடையே வாக்காளர்களின் அணுகுமுறை, வாக்குப்பதிவு விகிதம் மற்றும் தேர்தல் பிரச்சினைகள் மாறுபடும் என்று அவர் சுட்டிக்காட்டினார். எனவே, மாநிலத் தேர்தல் முடிவுகளை வைத்து நாடாளுமன்றத் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்க முடியாது என்றும் கூறினார்.

2021ஆம் ஆண்டு மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் காடெக் தொகுதியை தேசிய முன்னணியிடம் இழந்திருந்தாலும், 2022ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அலோர் காஜா நாடாளுமன்றத் தொகுதியில் அதிக வாக்குகளைப் பெற்றதை அட்லி நினைவுபடுத்தினார். 

மேலும், காடெக் தொகுதியில் தேமு அடிக்கடி வேட்பாளர்களை மாற்றுவது குறித்து மக்களிடையே அதிருப்தி நிலவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், காடெக் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான்  இளம் வேட்பாளரை நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அட்லி, தங்களுக்குச் சாதகமான வெற்றி வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார். மக்களின் தேவைகளைப் புரிந்து அனைத்து சமூகங்களுக்கும் சேவையாற்றக்கூடிய நிலையான மக்கள் பிரதிநிதிகளையே வாக்காளர்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles