ஆயர் கெரோவை இளைஞர்களின் உருமாற்ற மையமாக மாற்ற திட்டம் 

மலாக்கா, நவ 10-

மலாக்கா மாநிலத்தின் ஆயர் கெரோ சட்டமன்றத் தொகுதியை இளைஞர்களுக்கான  உருமாற்ற மையமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாக பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கெர்க் சீ யீ (Kerk Chee Yee) தெரிவித்துள்ளார். இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளையும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளையும் உருவாக்குவதே தனது நோக்கம் என்றார்.

மலாக்கா மாநிலத்தில் இளைஞர்கள் தங்கி வாழ்வதற்கும், தங்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்றும், அதற்கான தொடக்கமாக ஆயர் கெரோ தொகுதியை மாற்றியமைக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாம் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகப் பணியாற்றிய காலத்தில் இளைஞர்களுக்காக 500 மெலாக்கா இளைஞர் வீடுகள் வழங்கும் திட்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையமான MAIOT அமைக்கும் முயற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில், கடந்த கால சாதனைகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துரைப்பதுடன், தொடர்ந்து மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து சேவையில் உள்ள குறைபாடுகளை மேம்படுத்தவும் தயாராக இருப்பதாக கெர்க் சீ யீ உறுதியளித்தார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles