தீபாவளி காலத்தில் தேர்தல் நடத்துவது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் – டத்தோஸ்ரீ அட்லி ஸாஹாரி

மலாக்கா, நவ 11-

தீபாவளி பண்டிகைக் காலத்தில் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுவது சரியான முடிவல்ல என்று மலாக்கா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அட்லி ஸாஹாரி தெரிவித்துள்ளார். தீபாவளி என்பது இந்திய சமூகத்தினர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் முக்கியமான பண்டிகை என்பதால், இக்காலத்தில் தேர்தல் நடைபெறுவது பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.

பண்டிகைக் காலத்தில் சிலர் வெளியூர்களுக்குச் சென்றிருக்கலாம். மற்றவர்கள் தங்களது வீடுகளில் தீபாவளி நிகழ்ச்சிகள் மற்றும் குடும்பச் சந்திப்புகளை ஏற்பாடு செய்திருக்கலாம். இத்தகைய சூழலில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் வாக்களிப்பு தொடர்பான பணிகளிலும் ஈடுபடுவது மக்களுக்கு கூடுதல் சுமையாக அமையும் என்றார்.

இருப்பினும், நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்கள் தொடர்ந்து மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தின் போது சில இந்திய சமூகத்தினர் தற்போதைய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஆதரவு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனாலும், பண்டிகைக் காலத்தில் தேர்தலை நடத்துவது அனைத்து தரப்பினருக்கும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை மறுக்க முடியாது. எனவே, எதிர்காலத்தில் தேர்தல் தேதிகளை நிர்ணயிக்கும்போது முக்கியமான பண்டிகைக் காலங்களையும் மக்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று டத்தோஸ்ரீ அட்லி ஸாஹாரி வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles