

கோலாலம்பூர், செப். 27-
8ஆவது இந்தியர் அபாக்கஸ் மணிக்கட்டை கணக்கிடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று செப்டம்பர் 27 ஆம் தேதி கோலாலம்பூர் YMCA மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
இன்றைய இளம் மாணவர்கள் மத்தியில் புத்தாக்கச் சிந்தனையை விதைக்கும் வகையில் மணிக்கட்டை கணக்கிடும் பாடமானது மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது என்று தாமான் கோத்தா செராஸ் முண்டககண்ணி அம்மன் ஆலயத் தலைவர் டத்தோ டாக்டர் எஸ். கனகசுந்தரம் தெரிவித்தார்.
மாணவர்கள் மத்தியில் இதுபோன்ற நுண்திறன் ஆற்றலை விதைத்து திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில்
மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் மற்றும் ஜெயம் நம்நாடு இயக்கத்தின் பொருளாளர் டாக்டர் தமிழ்ச் செல்வி கலந்து சிறப்பித்தனர்
எட்டு வயதில் தன் முதல் கட்டப் பயணத்தை அபாக்கஸ் மணிக்கட்டைக் கணக்கிடும் திறனை அடிப்படையாகக் கொண்ட அனுபவத்தை தற்போது எட்டாவது கட்டப் பயணத்தை மேற்கொண்டு வருவதாக
அகமட் ஜசில் பின் காலே தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
கணக்குப் பாடங்களில் முக்கிய கவனத்தை ஈர்க்கும் ஓர் உத்தியாக அமைத்துக் கொள்ள உதவும் இந்த மணிக்கட்டை கணக்கிடும் முறை சிறந்து விளங்குகிறது என்று ஆசிரியர் ரகு கூறினார்.
இந்தத் திறனின் சுமார் 200 கேள்விகளை 8 நிமிடத்தில் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட மாணவர்களாக விளங்கி வருகின்றனர்.
இதுபோன்ற கணக்கிடும் முறையைச் செம்மையாக வடிவமைத்த பெருமை ஆசிரியர் ரகு அவர்தம் குழுவினர்களையே சாரும்
இடது. வலது மூளை சக்தி புத்தாக்கம் பெறும். நான்கு முதல் 15 வயது இளைய தலைமுறையினர் மத்தியில் இதுபோன்ற ஆற்றலை அபாரமாக பெருக்கிக் கொள்வது சாத்தியம் என்றார் அவர்.
கோலாலம்பூர், கிள்ளான், சிரம்பான், பினாங்கு ஆகிய இடங்களில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட இளம் மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
இப்போட்டி
நிகழ்ச்சியில் ரீத்தா கணேசர் ராவ் உட்பட
ஆசிரியர்கள், பெற்றோர், பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

