


கோலாலம்பூர், நவ 9-
மலேசியாவில் தீபாவளி அல்லது பிற பண்டிகைகளை முன்னிட்டு நடைபெறும் திறந்த இல்ல உபசரிப்பு (Open House) நிகழ்வுகளில் அமைச்சர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் கலந்து சிறப்பிப்பார்கள்.
குறிப்பாக தீபாவளிப் பண்டிகையையொட்டி மலேசிய அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார்கள்.
அந்த வகையில் தித்தி வங்சா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தோட்டத் தொழில் துறை மூலத் தொழில் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி அவர்கள் ராஜா காளிமுத்து இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி விருந்து உச்சரிப்பில் கலந்து சிறப்பித்தார்.
கம்போங் பண்டான் பிரித்தீவி கொண்டோ ம இகா கிளைத் தலைவர் ராஜா காளிமுத்து இல்லத்தில் நடைபெறும் விருந்து உச்சரிப்பில் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோகாரி ஆண்டு தோறும் கலந்து கொள்வார்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற விழாவில் சிறப்பு வருகை தந்த அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோகாரியை ராஜா காளிமுத்து தம்பதியர் வரவேற்று அன்புடன் உபசரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

