பேராக் மாநிலத்திற்கு பெருமை சேர்த்த 55 மூத்த – இளம் விளையாட்டளர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது!

ஊத்தாங் மெலிந்தாங் ஜூன் 21-
பேராக் மாநிலத்திற்கு பெருமை சேர்த்த 55 மூத்த விளையாட்டளர்களை பாராட்டி பாகான் டத்தோ தொகுதி காங்கிரஸ் சிறப்பு செய்தது மிகவும் பாராட்டுக்குரியது.

பாகான் டத்தோ மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் வியட்நாமில் மலேசியாவைப் பிரதிநிதித்து விளையாடிய சாதனை படைத்தவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

மேலும் ஸ்பெயினின் லெவாண்டே எஃப்சி அணிக்காக நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இளம் கால்பந்து வீரருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

இது தவிர்த்து பேரா மாநிலம் உட்பட பாகான் டத்தோவை பிரதிநிதித்து கால்பந்து, பேட்மிண்டன், கபடி, சிலம்பம் போட்டியில் விளையாடிய பதக்கங்களை வென்ற 55 மூத்த விளையாட்டாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.

ஊத்தாங் மெலிந்தாங் சன்மார்க்க மண்டபத்தில் நடைபெற்ற பாகான் டத்தோ தொகுதி விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழாவில் இவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சி, எம்ஐசி-யின் 80வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும், இளைஞர்களை மேம்படுத்துதல், விளையாட்டு மற்றும் உள்ளூர் சமூக மேம்பாடு ஆகியவற்றில் கட்சியின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பாகான் டத்தோ தொகுதி இளைஞர் அணி தலைவர் அர்விந்த் அப்பளசாமி தெரிவித்தார்.

நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டவும், சர்வதேச அளவில் நாட்டிற்குப் பெருமை சேர்த்த இளம் விளையாட்டு வீரர்களைப் பாராட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles