
ஈப்போ, ஜூன் 6-
பேராக் மாநிலத்தில் பூசிங் என்ற இடத்தில் உள்ள மெதடீஸ் சீனர் தேவாலயத்திற்கு பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ சிவகுமார் நிதியுதவியை வழங்கினார்.
100 ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடவிருக்கும் இந்த தேவலாயத்திற்கு உதவும் வகையில் சிவகுமார் நிதியுதவியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்து காஜா நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் மூலம் சிவகுமார் வழங்கிய நன்கொடையை தேவலாயத்தின் Pastor Leong பெற்று கொண்டார்.

