
பத்துகாஜா, ஜுன். 5: இங்குள்ள லகாட் சீனப்பள்ளியின் சிற்றுண்டிசாலையின் கூரைகள் பழுதடைந்து விட்டன. இந்த சிற்றுண்டியின் மேற்கூரையை மாற்றும் பணியும், உச்சவரம்புக்கு சாயம் அடிக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது என்று மத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார்.
இங்குள்ள ஜே.பி.கே.கே லகாட் தலைமையில் பதுகாஜா நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் வாயிலாக நிதி பெற்று இத்திட்டம் செயல்படுத்தப்படுத்தப் பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தை வெற்றியடையச் செய்த பள்ளி நிர்வாகத்திற்கும், அதில் ஈடுபட்ட அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
பணிகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு மீண்டும் ஒரு முறை நேரடியாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வருகை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

