
கோலாலம்பூர், ஜூன் 22-
வரும் ஜூலை மாதம் தொடங்கி மலேசியர்களுக்கான உதவித் தொகை பெற்ற ஒரு லிட்டர் டீசல் எண்ணெய் விலை 2 ரிங்கிட் 10 சென்னாக குறையுமென பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
அந்த அறிவிப்பு தொடர்பான நிதியமைச்சின் ஊடக அறிக்கையை தொடர்பு அமைச்சர் ஃபாமி பட்சில் தமது சமூக அகப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
உதவித் தொகை பெற்ற டீசல் விற்பனை மைகாட் அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும்.
இந்த புதிய விலையின் கீழ், தகுதி பெற்ற மலேசியர்கள் உதவித் தொகை பெற்ற ஒரு லிட்டர் டீசலுக்கு 2 ரிங்கிட் 10 சென்னை செலுத்துவர்.
உதவித் தொகை பெறாத டீசலின் விலை லிட்டருக்கு 4 ரிங்கிட் 37 சென்னாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

