
கோலாலம்பூர் ஜூன் 6- இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்திற்காக (BRIEF-i) பேங்க ராக்யாட் 5 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர் டத்தோ இரமணன் நேற்று அறிவித்தார்.
இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவர்களின் வர்த்தக விரிவாக்கம், மூலத்தன செலவுகளுக்கு உதவும் நோக்கில் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை மிகவும் வரவேற்கிறேன் என்று மலேசிய இந்திய சிறு தொழில் வர்த்தக சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ ஆர் இராமநாதன் தெரிவித்தார்.
இந்திய தொழில் முனைவர்கள் பயன்பெறும் வகையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் கீழ் மற்றொரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்த முழு ஆதரவு வழங்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
எனவே, இத்திட்டத்தின் வாயிலாக தொழில்முனைவர்கள் வணிகத்தைத் தொடரவும், நிறுவனங்களை மேலும் விரிவாக்கம் செய்வதற்கும் வழிவகுக்கும் என துணை அமைச்சர் டத்தோ இரமணன் கூறியிருப்பது முற்றிலும் உண்மை என்று அவர் கூறினார்.

