சிதைந்த மோடியின் பிம்பம்..பாஜகயை நிராகரித்த இந்தியர்கள்..கைகொடுக்காத ராமர் கோயில் அரசியல் : சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்!

வாஷிங்டன் : ஜூன் 8-
18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் மோடியை பலவீனப்படுத்திவிட்டதாகவும் இதுவரை இருந்த மோடி பிம்பம் சரிந்துவிட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

இந்த தேர்தல் மூலம் மோடி வெல்ல முடியாதவர் என பாஜகவினர் கட்டமைத்த பிம்பம் முதல்முறையாக பொய்த்துவிட்டதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் கொள்ளாத மோடி, 2016ம் ஆண்டில் நிதி அமைச்சருக்குக் கூட தெரியாமல் பணமதிப்பிழப்பு அறிவித்தது, ஜம்மு – காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை அமித்ஷா நேரடியாக நாடாளுமன்றத்தில் அறிவித்ததை சுட்டிக் காட்டிய நியூயார்க் டைம்ஸ், இனி இது போன்ற நடவடிக்கைகள் நடக்காது என்றும் தெரிவித்துள்ளது.

கத்தார் ஊடகமான அல் ஜஸீராவும், 2024 தேர்தல் முடிவுகள் மூலம் மோடியின் பிம்பம் சிதைந்துள்ளது என குறிப்பிட்டு எழுதியுள்ளது.

மோடி ஆட்சி அமைந்தாலும் அவரது அரசாங்கம் கூட்டணிக் கட்சிகளின் கைகளில் இருக்கும் என்றும் எழுதி உள்ளது

அமெரிக்கா நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் கூற்றுப்படி, மோடி தலைமையை அதிகளவிலான இந்திய வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர் என்றும் கூறியுள்ளது.

30 ஆண்டு கால ராமர் கோவில் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றியது என்றாலும் அது தேர்தலில் எந்த பலனையும் ஏற்படுத்தவில்லை என்று டைம் பத்திரிகை கூறியுள்ளது.

தினகரன்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles