ஈப்போ மேயர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

ஈப்போ, ஜுன்.8 இங்குள்ள புந்தோங் சுங்கை பாரி சாலையில் இரு குழிகள் உருவாகி வருகின்றன. இந்த குழியால் உயிர்சேதம் அல்லது உடமை சேதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக இடியப்பம் புட்டு வியாபார கடையின் உரிமையாளர் திவநாதன் சுப்பிரமணியம் ( வயது 52) கூறினார்.

இவ்விவகாரம் குறித்து இங்குள்ள கவுன்சிலரிடம் இரு மாதங்களுக்கு முன்னதாக புகார் செய்ப்பட்டு விட்டது.

ஆனால், இதுவரை இந்த குழியை மூடிவதற்கான நடவடிக்கைகளை ஈப்போ மாநகரம் மேற்கொள்ளவில்லை என்று அவர் வருத்தமாக கூறினார்.

இந்த சாலையில் முதலில் ஒரு குழி மட்டுமே இருந்தது. தற்போது இரு குழிகள் உருவாகி விட்டன.

இந்த பகுதி நாளுக்கு நாள் கீழே இறங்கி கொண்டிருக்கிறது. அத்துடன், இதற்கு கீழ் பாதள சாக்கடையும் உள்ளது. நாளடைவில் இங்கு செல்லும் வாகனங்கள் புதையுண்டு மரணத்தையும் உருவாக்கலாம்.

அத்துடன், இங்குள்ள பிரத்தியேக வகுப்பு மாலை மணி 7.00 க்கு தொடங்கி இரவு மணி 10.00 க்கு முற்றுப்பெறுகிறது.

இந்த குழியால் இங்கு வரும் மாணவர்களுக்கு அபாயத்தை உருவாக்கலாம் என்று அவர் எச்சரித்தார்.

இவ்விவகாரத்தில் மற்றவர்களை குறைகூறுவதை விட்டு, ஈப்போ மேயர் டத்தோ ருமாய்ஸி பஹாரின் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்த பின் வருந்தி பயனில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles