

ஷா ஆலம், ஜூன் 13– சரவாக் மாநிலத்தில் எதிர்வரும் ஆகஸ்டு 17 முதல் 24 வரை நடைபெறும் 21வது மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) முதல் மூன்று இடங்களில் ஒன்றைப் பெறுவதில் சிலாங்கூர் நம்பிக்கையுடன் உள்ளது.
இந்தப் போட்டிக்கான 488 தங்கப் பதக்கங்களில் 13 முதல் 15 சதவீதம் வரை வெல்லும் இலக்கை சிலாங்கூர் நிர்ணயித்துள்ளது என்று சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றத்தின் நிர்வாக இயக்குனர் முகமதூ நிஜாம் மர்ஜுக்கி கூறினார்.
இப்போட்டிக்கு சிலாங்கூர் 1,138 விளையாட்டு வீரர்களை அனுப்பும் என்றும், அவர்கள் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
bernama

