நச்சு உணவால் ஏற்பட்ட மரணம் தொடர்பான விசாரணையில் 8 பேரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது

கோலாலம்பூர், ஜூன் 13: கடந்த திங்கட்கிழமை நச்சு உணவால் ஏற்பட்ட 17 வயது சிறுவன் மற்றும் இரண்டு வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணையில் 8 பேரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் குறிப்பிட்ட மதப் பள்ளிக்கு உணவு வழங்கியவர்களின் வாக்குமூலங்களும் இதில் சேர்க்கப் பட்டுள்ளன என கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நூர் அரிஃபின் முகமட் நசீர் கூறினார்.

மதப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் உணவு உண்டதன் விளைவாக பாதிக்கப்பட்ட மற்ற நபர்களையும் காவல்துறையினர் அடையாளம் கண்டு வருவதாக அவர் கூறினார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles