டத்தோ இராமநாதன் செட்டியார் புதல்வி திருமணம் விமரிசையாக நடைபெற்றது!

காரைக்குடி, ஜூன் 26-
மலேசிய நகரத்தார் வர்த்தக தொழில் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர்.இராமநாதன் – டத்தின் மீனாட்சி ஆச்சி தம்பதியரின் அன்பு புதல்வி அம்பிகா மீனாட்சி மற்றும் பினாங்கு தேவராயன் செட்டியார் -வள்ளி ஆச்சி தம்பதியரின் அன்பு புதல்வர் சுப்பையா தேவராயன் இனிய திருமணம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

தமிழ் நாடு காரைக்குடி திருமயம் விரையாச்சிலை ஆர்.எம்.ஆர் இல்லத்தில் இன்று காலையில் இனிதே திருமணம் நடைபெற்றது.

தமிழ் நாடு திருமயம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி முக்கிய பிரமுகராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இரு வீட்டார் சார்பில் உறவினர்கள் குடும்ப நண்பர்கள் பெரும் அளவில் திருமண வைபவத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

குறிப்பாக மலேசிய உட்பட பல நாடுகளில் இருந்து பிரமுகர்கள் திருமண விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், புகைப்படக் கலைஞர் பி.மலையாண்டி, முருகன் ஆகியோரும் திருமண விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் உதவி தலைவர் டாக்டர் சித்ரா தேவி, டாக்டர் நவமணி, டாக்டர் மரியா ரூபினி, தேசிய இருதய அறுவை சிகிச்சை கழகத்தின் டாக்டர் கானா, மலேசிய நகரத்தார் வர்த்தக தொழில் சம்மேளனத்தின் செயலாளர் ஷண், குமரன், பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த டத்தோ பழனி, வீரப்பன், டத்தோ இராமநாதனின் மைத்துனர் மீனாட்சி சுந்தரம், முத்தையா , கோலாலம்பூரை சேர்ந்த டத்தோ கிருஷ்ணன், டத்தோ மோகன், டத்தோ எம்.கே காசி , காசி மேலாண்மை கழக நடப்பு காரியதரிசி முத்துகுமார், சீனியர் கமிட்டி மெம்பர்ஸ், முன்னாள் தலைவர் லேனா நாராயணன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த திருமண விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண இன்னிசை விழாவில் புகழ்பெற்ற பாடகர் சிப்பி முத்து, பிரியங்கா, ஸ்ரீதர் ஆகியோர் பாடல்களை பாடி அசத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles