
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி வயது 39. கடந்த 2006 உலக கோப்பை தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஆறாவது முறையாக இத்தொடரில் பங்கேற்றுள்ளார்.
ஆஸ்திரியாவுடன் 2 கோல் அடித்த மெஸ்ஸி, உலக கோப்பை அரங்கில் அதிக கோல் அடித்த வீரர் என சாதித்தார் (18 கோல், 28 போட்டி).
இவரை கவுரவிக்கும் வகையில் அர்ஜென்டினாவின் படகோனியாவின் தெற்கு பகுதியின் தொலை துார நகரான ‘குட்ரல் கோ’ என்ற இடத்தில் 85 அடி (26 மீ.,) உயரத்தில் புதிய ராட்சத சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக 70 டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளன. பலமான காற்றினால் சிலை சேதமடையாத வகையில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

