
முனிக், ஜூலை 10-
இன்று அதிகாலை நேரத்தில் நடைபெற்ற யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற்றதது.
உலகப் புகழ்பெற்ற ஆட்டக்காரர்களை கொண்டிருந்த
இரு அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் ஸ்பெயின் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ஸ்பெயின் அணியின் வெற்றி கோல்களை லாமினி யமால், டேனி ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து ஸ்பெயின் அணியினர் யூரோ கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.
நாளை அதிகாலை 3 மணிக்கு நடைபெறும் மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து நெதர்லாந்து மோதுகிறது.
இதில் வெற்றி பெறும் குழு இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெறும்.

