ஊட்டச்சத்து பிரச்சனையைக் களைய ஒவ்வொரு தொகுதியிலும் குழந்தைகள் ஆரோக்கிய மையம் உருவாக்கம்

ஷா ஆலம், ஜூலை 10- குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைக்க ஒவ்வொரு மாநில சட்டமன்றத் தொகுதியிலும் ‘அனாக் சிலாங்கூர் அனாக் சாயா’ (அசாஸ்) மையத்தை மாநில அரசு நிறுவும்.

வ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள சிலாங்கூர் சமூக சுகாதார தன்னார்வலர்களால் (சுக்கா) ஒருங்கிணைக்கப்பட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டப் பின்னர் அக்குழந்தைகளுக்கு உணவு கூடை உதவி வழங்கப்படும் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

குழந்தைகளின் உடல் வளர்ச்சி விகிதத்தை மதிப்பிடுவதற்காக ஆறு மாதங்களுக்கு அவர்கள் மீது கண்காணிப்பு செயல்முறை மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதன் முக்கியத்துவம் பற்றி பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் ஒன்பது மாவட்டங்களில் அசாஸ் விழாவையும் நடத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles