செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மாள் கோவில் விவகாரத்தில் புதிதாக முளைத்திருக்கும் மூன்றாம் தரப்பு யார்?கோவில் செயலாளர் ஹரிஹரன் கேள்வி

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் ஜூலை 10-
செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மாள் கோவில் விவகாரத்தில் இப்போது திடிரென்று மூன்றாம் தரப்பு முளைத்துள்ளது.

இந்த கோவில் நிலப் பிரச்சினை இன்னும் தீர்வு காணப்படாமல் இருக்கும் வேளையில் கோவில் நிர்வாகத்திற்கு தெரியாமல் மூன்றாம் தரப்புடன் ஓய்டிஎல் மேம்பாட்டு நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது என்று தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

நாகம்மாள் கோவில் நிர்வாகம் முறையாக தேசிய பதிவு இலாகாவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது .

ஓய்டிஎல் மேம்பாட்டு நிறுவனம் எங்களிடம் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் தவிர திடீரென முளைத்த மூன்றாம் தரப்புடன் அல்ல என்று கோவில் செயலாளர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று காலையில் செந்நூல் காவல் நிலையத்தில் புகார் செய்ததாக ஹரிஹரன் தெரிவித்தார்.

போலீஸ் புகாருக்கு பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

ம இகா மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ ஏ.கே. இராமலிங்கம் மற்றும் பத்து தொகுதி தலைவர் பாலகுமாரன் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles