கின்ராரா தமிழ்ப்பள்ளி உடைப்படுகிறாதா? வதந்திகளை நம்ப வேண்டாம்! ஓய்பி பிரபாகரன் வேண்டுகோள்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் ஜூலை 10-
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கின்ராரா தமிழ்ப்பள்ளி உடைபடுகிறது என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.

கின்ராரா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்ட பின்னர் அறிக்கைகளை வெளியிடுங்கள்.

அதை விடுத்து பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களை குழப்ப வேண்டாம்.

கின்ராரா தமிழ்ப்பள்ளி உடைப்படுகிறது என்பதற்கு ஆதாரம் இருக்கிறாதா என்று அவர் கேள்வியை எழுப்பினார்.

சாலை விரிவாக்கத்திற்கு வழிவிடும் வகையில் பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி நிலத்தில் ஒரு பகுதியை எடுத்து கொள்ள மேம்பாட்டு நிறுவனம் கோரிக்கை முன் வைத்துள்ளது.

அதற்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

ஆனால் அதற்குள் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே கின்ராரா தமிழ்ப்பள்ளி வாரியத் தலைவர் கோபி குருசாமி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோர் பள்ளிக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பி வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

இது தொடர்பில் அவர்கள் கோலாலம்பூர் டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles