

செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஜூலை 10-
கின்ராரா தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஏழு நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்று நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ கலைவாணர் கேட்டுக் கொண்டார்.
கின்ராரா தமிழ்ப்பள்ளி நிலத்தில் கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
இது தமிழ்ப் பள்ளிக்கு சொந்தமான நிலம்.
சாலை விரிவாக்கத்திற்கு வழிவிடும் வகையில் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்ப் பள்ளி நிலத்தில் ஒரு பகுதியை கோருகிறது.
ஆனால் இந்த நிலத்தை விட்டு கொடுக்க முடியாது என்று அவர் சொன்னார்.
700 மாணவர்கள் கல்வி பயின்று வரும் பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி நிலத்தில் ஒரு சதுர அடிகூட கூட எடுக்க கூடாது என்று அவர் சொன்னார்.
இன்று நாடாளுமன்ற வளாகத்தின் முன் திரண்ட தமிழ் அமைப்புகள் கின்ராரா தமிழ்ப்பள்ளியை காப்பாற்ற குரல் எழுப்பினர்.
இது தொடர்பில் டத்தோ கலைவாணர் கொடுத்த மகஜரை பிரதமரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் பெற்றுக் கொண்டார்.
தமிழன் உதவும் கரங்கள் தலைவர் முரளி, பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மதியழகன், தமிழ் கலை உட்பட பலரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.

