மலேசிய இந்திய மக்கள் கட்சி தலைவர் புனிதன் – டத்தோ மோகன் சந்திப்பு!அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

கோலாலம்பூர் ஜூலை 10-
மலேசிய இந்திய மக்கள் கட்சித் தலைவர் பி. புனிதன் மற்றும் டத்தோ டி மோகன் இடையிலான சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் நடைபெற்று முடிந்த ம இகா தேசிய உதவித் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டத்தோ டி. மோகன் அதிர்ச்சி தரும் வகையில் 58 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

டத்தோ மோகனின் தோல்வி இந்திய சமுதாயத்திற்கும் கட்சிக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு என்று ம இகா தேசிய முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் நேற்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி தலைவர் புனிதன், அதன் துணை தலைவர் சுப்பிரமணியம் ஆகியோரை டத்தோ டி.மோகன் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட படங்களை புனிதன் முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த படங்கள் வெளியான சிறிது நேரத்தில் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலேசிய இந்திய மக்கள் கட்சியில் டத்தோ மோகன் இணைகிறாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

நீண்ட கால நண்பர் மற்றும் இந்திய சமுதாயத்தின் நலன்கள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக புனிதன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles