
முனிச்: ஜூலை 11-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்தில் இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் மோதவுள்ளன.
டோர்ட்மண்ட் அரங்கில் இன்று அதிகாலையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நெதர்லாந்து அணியை சந்தித்து விளையாடியது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இங்கிலாந்து அணியின் வெற்றி கோல்களை ஹாரி கேன், ஓலய் வாட்கிங்ஸ் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து இங்கிலாந்து அணியினர் யூரோ கிண்ண இறுதியாட்டத்திற்கு முன்னேறினர்.

