டீசல் மானியம் பெறத் தகுதியுள்ள சரக்கு வாகனப் பட்டியலை விரிவாக்க அரசு பரிசீலனை!

ஷா ஆலம், ஜூலை 10- டீசல் மானியம் பெற தகுதியான பட்டியலில் உள்ள சரக்கு போக்குவரத்து வாகனப் பிரிவுகளை விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரை 33 வகையான தரை மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்கள் மானிய டீசல் கட்டுப்பாட்டு அமைப்பின் (எஸ்.கே.டி.எஸ்.) கீழ் மானியம் பெற்றுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமது அலி கூறினார்.

இந்த மானியத் திட்டம் தொடர்பாக எந்தவொரு பரிந்துரையையும் ஏற்கத் தாம் தயாராக இருப்பதாகத் அவர் தெரிவித்தார்.

விவசாயிகள் மற்றும் சிறிய அளவில் செம்பனை பயிரிடுவோர் பயன்படுத்தும் ரோரோ வகை போக்குவரத்து லாரிகளையும் இந்த பரிந்துரை உள்ளடக்கியுள்ளது என்று அவர் கூறினார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles