
ஷா ஆலம், ஜூலை 11 – கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மூன்று அடிப்படைக் கூறுகளான பாதுகாப்பு, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றுடன் 2025 ஆம் ஆண்டில் ஆசியான் தலைவர் பதவியை ஏற்பதற்கு மலேசியா தயாராகி வருகிறது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் கூறினார்.
அடுத்தாண்டு செயல்படுத்துவதற்காகக் கடந்த ஜூன் மாதம் வரை தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் பணிக்குழுக்கள் மட்டத்தில் மொத்தம் 257 கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்
ஆசியான் கூட்டம் கோலாலம்பூரில் மட்டுமல்லாமல் கோத்தா கினாபாலு, லங்காவி, ஜோகூர், மலாக்கா மற்றும் பினாங்கு போன்ற நாட்டின் பிற மாநிலங்களிலும் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.
ஆசியான் தலைவர் பதவியை வகிக்கும் போது, தொழில்முனைவோர், வர்த்தகம் மற்றும் மாநிலங்களுக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பறைசாற்றுவதே எங்கள் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.
bernama

