
ஷா ஆலம், ஜூலை 11: முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) மூலம் கேரி தீவில் மூன்றாவது துறைமுகத்தின் மேம்பாடு, ஓராங் அஸ்லி சமூகம் உட்பட உள்ளூர்வாசிகளுக்கு 100,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், அத்தீவில் உள்ள ஓராங் அஸ்லி சமூகமும் ஒரு சிறந்த தகவல் தொடர்பு நெட்வொர்க் அமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகளை அனுபவிக்கும் என்று ஓராங் அஸ்லி சமூக நலன் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு தெரிவித்தார்
“மேலும், இந்த திட்டம் சுற்றுலா நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை தூண்டும்,” என அவர் மாநில சட்டசபை கூட்டத்தொடரில் கூறினார்.
இது நிலம், கல்வி, உள்கட்டமைப்பு, பொருளாதாரம், தலைமைத்துவம், கலாச்சாரம் மற்றும் சுகாதாரம் ஆகிய ஏழு முக்கிய அம்சங்கள் அடிப்படையில் ஓராங் அஸ்லி சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மாநில அரசின் தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளது என பாப்பாராய்டு கூறினார்.

