இன்று உலகம் முழுவதும் “கம் பேக் சேனாபதி!” – “இந்தியன் 2” !!!!! ஆயிரம் கோடி வசூலை குவிக்கப் போகிறது…

கோலாலம்பூர், ஜூலை 12
புகழ்பெற்ற
இயக்குநர் ஷங்கர்- உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் இன்று ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லைக்கா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைத்து இந்தியன் 2 திரைப்படம் வெளியானது.

மலேசியாவில் இந்தியன் 2 திரைப்படத்தை 3டோட் மூவிஸ் நிறுவனம் வாங்கி வெளியீடு செய்கிறது.

இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நிலையில் நடிகர்கள் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ஜெகன், ரகுல் ப்ரித் சிங், சமுத்திரகனி, மனோபாலா, தம்பி ராமையா, ஆகியோர் நடித்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐந்து வருடங்களின் சவால்களுக்குப் பிறகு இன்று வெளியாகி உள்ளது.

மலேசியா உட்பட உலகம் முழுவதும் இந்தியன் 2 திரைப்படத்திற்கு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கம்பேக் சேனாதிபதி மீண்டும் வந்து விட்டதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்தியன் 2 திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை குவிக்கும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles