


ஈப்போ ஜூலை 12-
பேரா மாநிலத்தில் இந்துக்கள் வழிபடுவதற்கு தேவையான ஆலயங்கள் உள்ளன மேலும் புதிய ஆலயங்களை நிர்மானிப்பதை நிறுத்தவேண்டும் என்று மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் வேண்டுகோள் விடுத்தார்.
பேராவில ஆலயங்கள கட்டப்பட்டு முறையே நிர்வகிக்க முடியாமல் அதனை பதிவு ரத்தாகும் நிலையில் உள்ளது.
பல ஆலயங்கள் பல லட்சம் ரிங்கிட் செலவில் நிர்மானிக்கப்பட்டு இன்று வழிபாடு செய்ய ஆள் இல்லாத நிலையும் உள்ளது.
ஆகவே இருக்கின்ற ஆலயங்களை முறையே பாதுகாப்பதுடன் முறையாக நிர்வகிக்க வேண்டும் என்று இன்று கோப்பெங்கில் உள்ள கோபிசான் எனும் இடத்தில் நிர்மாணிக்கபட்ட அருள் மிகு முத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவில் கலந்துக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.
பேரா மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் வழிபாட்டு ஸ்தலங்களுக்கு ஒதுக்கீடு செய்யபட்ட 1 கோடி ரிங்கிட் முறையே வழங்கப்பட்டு வருகிறது.
கோப்பிசான் எனும் இடத்தில் நிர்மானிக்கப்பட்ட முத்து மாரியம்மன் ஆலயம் 81 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது.
இது ஐந்தாவது கும்பாபிஷேகம் ஆகும் என்று அவர் சொன்னார்.
இந்த ஆலயம் 6 லட்சம் 50 ஆயிரம் ரிங்கிட் செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாநில அரசு மூலம் வெ. 50 ஆயிரம் மற்றும் கோப்பெங்கில் நாடாளுமன்ற, தேஜா சட்டமன்றம், மாத்திய அரசு மூலம் ஆக மொத்தம் 226, 000்ரிங்கிட் வழங்கப்பட்டுள்ள தகவலைத் தெரிவித்தார்
கோப்பெங் நகரில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்திற்கும் வெ.55 ஆயிரம் நிதி வழங்கியுள்ளதுடன் இந்த வட்டாரத்தில. உள்ள மேலும் இரண்டு ஆலயங்களுக்கு நிதி வழங்கியுள்ளதையும் குறிப்பிட்டார்.
கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் தான் காய் இங் தேஜா சட்டமன்ற உறுப்பின் சந்திர இங் உட்பட பலர் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்துக்கொண்டனர்…

