பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் அடகு கடை அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது!

மா.பவளம்

கோலாலம்பூர் மே 15-
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் அடகு கடை அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.

சீனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய இந்த துறையில் இப்போது இந்தியர் களம் இறங்கி இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது என்று ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஸ்ரீதரன் தலைமையிலான டிசாரா அசெட்ஸ் வென்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அடகுக்கடை நேற்று பிரிக்பீல்ட்ஸில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டபோது ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வேளையில் அக்கடையின் உரிமையாளர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அடகுக் கடை போன்று மற்ற சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் நம்மவர்களும் கால்பதித்து வெற்றி பெற வேண்டும்.

இதுவே எனது விருப்பமாகும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

முன்னதாக அடகுக்கடை திறப்பு விழாவில் மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன், ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ நடராஜா உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles