
சென்னை, மே 15-
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை தோற்கடித்து தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பாபு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
கொளத்தூர் எப்போதும் திமுக கோட்டையாக இருந்தது.
ஆனால் இம்முறை பாபு வெற்றி பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு சார்பில் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
இது இவருக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது என்று கூறப்படுகிறது.

