

செ.வே.முத்தமிழ்மன்னன்
பிறை ஜூலை 12-
பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கம் மற்றும் பிறை எம்.பி.கே.கே ஏற்பாட்டில் கே.ரகு கிண்ண கால்பந்து போட்டி வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
பெண்களுக்கான இந்த காற்பந்து போட்டியின் கிண்ண அறிமுக விழா அண்மையில் நடைபெற்றது.
“பிறை சமூகத்திற்கு ரகுநாதன் @ தனபால் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பாராட்டுவதற்கும் அங்கீகரிப்பதற்காகவும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது என்று பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கத்தின் துணை தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
கே.ரகு கடந்த 15 ஆண்டுகளாக ஐ.செ.க கட்சி மற்றும் பிறை எம்.பி.கே.கே-வின் சிறந்த உறுப்பினராக சேவையாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
ரகு கிண்ண அறிமுக விழாவை எம்.பி.எஸ்.பி கவுன்சிலர் பொன்னுதுரை தொடக்கி வைத்தார்.
இந்த போட்டியை வெற்றியடைய உறுதுணையாக இருக்கும் பிறை எம்.பி.கே.கே உறுப்பினர்கள், JPWK மற்றும் JBPP உறுப்பினர்கள் மற்றும் பிறை சட்டமன்ற அலுவலகத்திற்கு ஸ்ரீ சங்கர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

